சுடச்சுட

    

    தன்னம்பிக்கையே மாணவ, மாணவிகளை மேம்படுத்தும் என்றார் திரைப்பட பாடலாசிரியர் பா. விஜய்.
    பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் மேல்நிலைப் பள்ளியின் 13-வது ஆண்டு விழா, அக்கல்வி நிறுவனங்களின் தாளாளர் அ. சீனிவாசன் தலைமையில் அண்மையில் நடைபெற்றது. விழாவில் பங்கேற்ற பா. விஜய் பேசியது:
    மாணவர்களில் சிந்திக்க தெரிந்த மாணவன், சிந்திக்க மறந்த மாணவன் என 2 வகை உள்ளனர்.
    மாணவர்கள் புத்தகங்களை விட்டு வெளியே வரவேண்டும். ஆசிரியர்களை மதிக்கத் தெரிந்த மாணவர்களைத்தான் இந்த உலகம் மதிக்கும். வகுப்புகளுக்கு புத்தகம்,எழுதுகோலோடு வருகிறோமோ, இல்லையோ, நம்பிக்கையோடு வரவேண்டும். தன்னம்பிக்கை தான் ஒவ்வொரு மாணவ, மாணவிகளையும் மேம்படுத்தும். தன்னம்பிக்கை உடையவன் தாழ்ந்து போனதில்லை. தயக்கத்தை உடைத்தெரிந்தால் உலகம் உங்களை ரத்தினக் கம்பளம் விரித்து வரவேற்கும்.
    அச்சமும், தாழ்வு மனப்பான்மையும் நமது திறமைகளை முடக்கிவிடும். திறமைக்கு என்ன கிடைக்கிறோ, அவற்றை தேர்ந்தெடுங்கள்.
    தமிழ்மொழி அறிவுக்கு நிகராக, ஆங்கில அறிவையும் வளர்த்துக்கொள்ளுங்கள் என்றார் அவர். தொடர்ந்து, விளையாட்டு மற்றும் அறிவுத்திறன் போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினார் பா. விஜய்.
    விழாவில், திரைப்படத் தயாரிப்பாளர் செல்வக்குமார், தனலட்சுமி சீனிவாசன் மெட்ரிக் பள்ளி முதல்வர் மரிய புஷ்பதீபா, ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவ, மாணவிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai