சுடச்சுட

    

    வடக்குமாதவியில் இன்று சிறப்பு மனுநீதி நாள் நிறைவு முகாம்

    By DIN  |   Published on : 18th January 2017 05:31 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பெரம்பலூர் அருகேயுள்ள வடக்குமாதவி கிராமத்தில் புதன்கிழமை (ஜன. 18) சிறப்பு மனுநீதி நாள் நிறைவு முகாம் நடைபெறுகிறது.
    சிறப்பு மனுநீதி நாள் நிறைவு முகாம், மாவட்ட வருவாய் அலுவலர் ப. வேலு தலைமையில் நடைபெறுகிறது. இதில், அனைத்து அரசுத்துறை அலுவலர்களும் கலந்துகொண்டு அரசின் திட்டங்கள், சிறப்புத் திட்டங்கள், நலத்திட்ட உதவிகள் குறித்து விரிவாக எடுத்துரைக்க உள்ளனர். மேலும், பொதுமக்களின் கோரிக்கை மனுக்கள் பெற்று நடவடிக்கை மேற்கொள்ள உள்ளனர்.
    எனவே, வடக்குமாதவி கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் இந்த முகாமில் கலந்துகொண்டு பயன்பெறலாம் என, வட்டாட்சியர் ச. பாலகிருஷ்ணன் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai