சுடச்சுட

  

  பெரம்பலூர் மாவட்டத்தில் அம்மா திட்ட முகாம் வெள்ளிக்கிழமை (ஜன. 20) நடைபெற உள்ளது.
  வேப்பந்தட்டை வட்டத்தில் மேட்டுப்பாளையம் (வ) வருவாய் கிராமத்திற்குள்பட்ட சிறுவயலூர், குன்னம் வட்டத்தில் ஒதியம், ஆலத்தூர் வட்டத்தில் கூடலூர் வருவாய் கிராமத்திற்குள்பட்ட இலுப்பைக்குடி ஆகிய கிராமங்களில முகாம் நடைபெற உள்ளது.
  முகாம்களில் பொதுமக்கள் அளிக்கும் மனுக்கள் உடனடியாக பரிசீலிக்கப்பட்டு, உரிய ஆணைகள் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இங்கு பெறப்படும் மனுக்கள் கணினியில் பதிவு செய்யப்பட்டு ஒப்புகை ரசீது வழங்கப்படும். உடனடியாக தீர்வு காண இயலாத விண்ணப்பங்களின் மனுதாரருக்கு 30 நாள்களுக்குள் பதில் தெரிவிக்கப்படும்.சம்பந்தப்பட்ட கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் இந்த முகாமில் பங்கேற்று பயன்பெறலாம் என, மாவட்ட ஆட்சியர் க. நந்தகுமார் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai