சுடச்சுட

  

  மனுநீதி நிறைவு நாள் முகாமில் ரூ. 1.26 கோடி நலத்திட்ட உதவிகள்

  By DIN  |   Published on : 19th January 2017 07:03 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  வடக்குமாதவி கிராமத்தில் புதன்கிழமை நடைபெற்ற சிறப்பு மனுநீதி நிறைவு நாள் முகாமில், 102 பயனாளிகளுக்கு ரூ. 1.26 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.  
  பெரம்பலூர் அருகேயுள்ள வடக்குமாதவி கிராமத்தில் புதன்கிழமை நடைபெற்ற சிறப்பு மனுநீதி நிறைவு நாள் முகாமுக்கு தலைமைவகித்து, மாவட்ட வருவாய் அலுவலர் பி. வேலு பேசியது:
  மக்களின் வாழ்க்கை மேம்பாட்டிற்காக தமிழக அரசு பல்வேறு திட்டங்களை  செயல்படுத்தி வருகிறது. இத்திட்டங்கள் மூலம் பயன்பெறுவதற்காக, அனைத்து மக்களும் ஆதார் அட்டைகள் பெற வேண்டும். மேலும், இனிவரும் காலங்களில் அரசு அறிவிக்கும் அனைத்து திட்டங்களுக்கும் ஆதார் மிக முக்கியம் என்பதால், ஆதார் அட்டை பெறுவதற்கு மக்கள் முன்னுரிமை தரவேண்டும் என்றார். பெரம்பலூர் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் இரா. தமிழ்ச்செல்வன் பேசியது:
  விவசாயிகளின் வாழ்வாதாரம் முன்னேற்றம் அடைவதற்காகவும், பொருளாதார நிலையில் மேம்பாடு அடையவும், உழவர் பாதுகாப்பு திட்டம் அறிவித்து, அதன்மூலமாக விவசாயிகள் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு திருமண நிதியுதவி திட்டம், இயற்கை மரண உதவித் தொகை பெறும் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது.  
  மேலும், கடும் வறட்சியால் பாதிக்கப்பட்ட பகுதிகளை அமைச்சர்கள் தலைமையில், உயர் அலுவலர்கள் குழு பார்வையிட்டு, பாதிக்கப்பட்ட அனைத்து விவசாயிகளுக்கும், உரிய நிவாரணம் பெற்றுத் தர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றார் அவர்.  
  முகாமில் வருவாய்த்துறை மூலம் 100 பயனாளிகளுக்கு ரூ. 1,25,75,700 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளும், வேளாண்மைத் துறை மூலம் மானிய விலையில் 1 பயனாளிக்கு ரூ. 10,000 மதிப்பில் விசைத்தெளிப்பான், 1 பயனாளிக்கு ரூ. 50,000 மதிப்பில் பி.வி.சி. பைப்புகள் என, மொத்தம் 102 பயனாளிகளுக்கு ரூ. 1,26,35,700 மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai