Enable Javscript for better performance
வளாக நேர்காணல்: 65 மாணவர்கள் தேர்வு- Dinamani

சுடச்சுட

    

    பெரம்பலூர் ஸ்ரீ ராமகிருஷ்ணா பாலிடெக்னிக் கல்லூரியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வளாக நேர்முகத் தேர்வில் 65 மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
    பெரம்பலூர் அருகேயுள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா பாலிடெக்னிக் கல்லூரியில், முருகப்பா குழுமம் சார்பில் வளாக நேர்முகத் தேர்வு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
    நேர்காணலை கல்வி நிறுவனங்களின் தாளாளர் எம். சிவசுப்ரமணியம் தொடக்கி வைத்தார். கல்வி நிறுவனங்களின் செயலர் எம்.எஸ். விவேகானந்தன், கல்லூரி முதல்வர் அ. சந்திரசூடன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற வளாக நேர்முகத் தேர்வில், இயந்திரவியல் துறையில் பயிலும் 95 மாணவர்கள் பங்கேற்றனர்.
    எழுத்துத் தேர்வு மற்றும் குழுத் தேர்வு மூலம் நேர்காணல் நடத்தப்பட்டு, 65 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.
    தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களுக்கு முருகப்பா குழுமத்தின் மனிதவள மேம்பாட்டுத்துறை அலுவலர் விஜய், பணி நியமன ஆணைகள் வழங்கினார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai