Enable Javscript for better performance
க.எறையூரில் அதிமுக பொதுக்கூட்டம்- Dinamani

சுடச்சுட

    

    பெரம்பலூர் அருகேயுள்ள க. எறையூர் கிராமத்தில், ஒன்றிய அதிமுக சார்பில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம் ஒன்றிய அவைத்தலைவர் சந்திரசேகரன் தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது.
    ஒன்றிய நிர்வாகிகள் பார்வதி, ஜானகி, பிச்சைபிள்ளை, ராமலிங்கம், கிளைச் செயலர்கள் செல்வராஜ், ராஜு, முன்னாள் ஊராட்சித் தலைவர் ராஜாமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
    மாவட்ட அணி செயலர்கள் எம்.என். ராஜாராம், கார்த்திகேயன், செல்வக்குமார், வழக்குரைஞர் குலோத்துங்கன், ஒன்றியக் குழு முன்னாள் தலைவர் து. ஜெயக்குமார் ஆகியோர் பேசினர். மாவட்டச் செயலரும், குன்னம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் ஆர்.டி. ராமச்சந்திரன், பெரம்பலூர் தொகுதி எம்எல்ஏ இரா. தமிழ்ச்செல்வன் ஆகியோர் எம்ஜிஆரின் வரலாறு, சாதனை, கட்சி உருவாக்கம், வளர்ச்சி, சிறப்பு திட்டங்கள் குறித்து பேசினர். தொடர்ந்து, 750 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
    ஒன்றிய இளைஞர் பாசறைச் செயலர் முத்தமிழ்ச்செல்வன், ஜெ. பேரவைச் செயலர் வடிவேல், இலக்கிய அணி துணைச் செயலர் ரவிச்சந்தின் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ஒன்றிய பாசறைத் தலைவர் முத்தமிழ்ச்செல்வன் நன்றி கூறினார்.

     

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai