Enable Javscript for better performance
கேந்திரிய வித்யாலய பள்ளி கட்டுமானப் பணிக்கு பூமிபூஜை- Dinamani

சுடச்சுட

    

    கேந்திரிய வித்யாலய பள்ளி கட்டுமானப் பணிக்கு பூமிபூஜை

    By DIN  |   Published on : 20th January 2017 12:58 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், கேந்திரிய வித்யலாய பள்ளிக்கு ரூ. 12.31 கோடியில் கட்டட கட்டுமான பணிக்கு வியாழக்கிழமை பூமி பூஜை நடைபெற்றது.
    பெரம்பலூரில் மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டுத் துறை மூலம் இயங்கும் இப்பள்ளி கடந்த 2009-ம் ஆண்டு தொடங்கப்பட்டு, மதனகோபாலபுரத்தில் உள்ள அரசு பிற்பட்டோர் நல மாணவியர் விடுதி வளாகத்தில் இயங்கி வருகிறது.  
    பள்ளிக்கு நிரந்தரக் கட்டடம் கட்டுவதற்கு, பெரம்பலூர் மதனகோபலசுவாமி கோயிலுக்குச் சொந்தமான ஆட்சியரகப் பெருந்திட்ட வளாகத்தில் 5 ஏக்கரிலான நிலம், பெற்றோர் ஆசிரியர் சங்கம் மூலம் ரூ. 78 லட்சத்துக்கு வாங்கப்பட்டது. தொடர்ந்து, மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை சார்பில் பள்ளிக் கட்டடம் கட்ட ரூ. 24 கோடி நிதி ஒதுக்கீடு செய்ய அனுமதித்தது.
    கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் கட்டமாக ரூ. 18.50 கோடி நிதி ஒதுக்கப்பட்டு, ரூ. 12.31 கோடியில் கட்டுமானத்தைத் தொடங்கும் பணி மத்திய பொதுப்பணித் துறையிடம் ஒப்படைக்கப்பட்டது.
    அதன்படி, பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் ஒதுக்கப்பட்ட இடத்தில் ஆசிரியர் குடியிருப்புடன் கூடிய பள்ளிக் கட்டுமான பணிக்கு பூமிபூஜை நடைபெற்றது. ஜன. 25 ஆம் தேதி பணி தொடங்கி 15 மாதங்களில் நிறைவுறும்.
    பள்ளி முதல்வர் கல்யாண்ராமன், மத்திய பொதுப்பணித் துறை திட்ட மேலாளர் கனகராஜ், செயற்பொறியாளர் பூபாலன், உதவிப் பொறியாளர் சுந்தரம், வித்யாலய குழு உறுப்பினர்கள், பெற்றோர் ஆசிரியர் சங்க நிர்வாகிகள், பள்ளி ஆசிரியர்கள் பங்கேற்றனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai