சுடச்சுட

  

  பெரம்பலூர் மாவட்ட வணிகர்கள் தங்களது விவரங்களை சரக்கு மற்றும் சேவை வரி இணையத்தில் பதிவு செய்துகொள்ள வேண்டும் என வலியுறுத்தியுள்ளார் வணிகவரித்துறை துணை ஆணையர் சரவணன் சட்டையப்பன்.
  சரக்கு மற்றும் சேவை வரியை விரைவில் அமல்படுத்தப்படவுள்ளதால் வணிகர்கள் தங்களது விவரங்களை w‌w‌w.‌g‌s‌t.‌g‌o‌v.‌i‌n​ என்ற வலைதளத்தில் பதிய வேண்டும். வணிகர்கள் மேற்குறிப்பிட்ட நாள்களுக்குள் தங்களது மின்னஞ்சல் மற்றும் இணையதளம் h‌t‌t‌p‌s:​c‌t‌d.‌t‌n.‌g‌o‌v.‌i‌n​  மூலம் பெறப்பட்ட தாற்காலிக பயனாளர் பெயர் மற்றும் கடவுச்சொல்லைப் பயன்படுத்தி பதிய வேண்டும்.
  ஜி.எஸ்.டி. பதிவை மேற்கொள்ள இணைய தள உதவி கோப்புகளைப் பயன்படுத்திக் கொள்ளலாம். வணிகவரித் துறை சார்பில் மாநிலத்தில் உள்ள அனைத்து முக்கிய நகரங்களிலும் இதற்காக சிறப்பு முகாம் ஏற்படுத்தப்பட உள்ளது. இந்த முகாம்களின் விவரத்தை வணிகர்களுடைய வரிவிரிப்பு வட்டங்களில் தெரிந்துகொள்ளலாம். வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

   

   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai