சுடச்சுட

    

    பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களில் வெள்ளிக்கிழமை மினி பேருந்துகள் இயங்காது.
    ஜல்லிக்கட்டு தடையை நீக்கக் வேண்டும், பீட்டா அமைப்பைத் தடை செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் கல்லூரிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகள், ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் தொடர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.இவர்களுக்கு ஆதரவு அளிக்கும் வகையில் பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களில் மினி பேருந்துகள் வெள்ளிக்கிழமை இயங்காது. அதன்படி, பெரம்பலூர் மாவட்டத்தில் 86 மினி பேருந்து, அரியலூர் மாவட்டத்தில் 42 மினி பேருந்து என மொத்தம் 128 மினி பேருந்துகள் இயங்காது என உரிமையாளர் சங்கத் தலைவர் ஜெ. சுப்ரமணியன், செயலர் ஆர். செந்தாமரைக்கண்ணன் ஆகியோர் தெரிவித்தனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai