Enable Javscript for better performance
விவசாயத் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்- Dinamani

சுடச்சுட

    

    பெரம்பலூர் புறநகர்ப் பேருந்து நிலையம் எதிரே, நவீன தாராளமய பொருளாதாரக் கொள்கைகளை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, சிஐடியு, விவசாயிகள் சங்கம், விவசாயத் தொழிலாளர்கள் சங்கத்தினர் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    சி.ஐ.டி.யு மாநிலச் செயலர் எஸ். ராஜேந்திரன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், பொதுமக்கள், தொழிலாளர்கள், விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலாளர்களைப் பாதிக்கும் நவீன தாராளமய பொருளாதாரக் கொள்கைகளைக் கைவிட வேண்டும். ரூபாய் மதிப்பிழப்பு நடவடிக்கையில் ஈடுபட்ட மத்திய அரசைக் கண்டிப்பது. வறட்சியால் பாதித்துள்ள விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும். காப்பீட்டு நிறுவனங்கள் மூலம் பயிர்க் காப்பீட்டுத் தொகையை வழங்க வேண்டும்.
    வறட்சியால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த அனைவருக்கும் ரூ. 10 லட்சம் வழங்க வேண்டும். விளை பொருள்களுக்கு கட்டுப்படியான விலை அறிவிக்க வேண்டும். கரும்பு டன்னுக்கு ரூ. 4,000 ஆயிரம் வழங்க வேண்டும். கரும்பு நிலுவையை உடனடியாக வழங்க வேண்டும். பால் கொள்முதல் விலை லிட்டருக்கு ரூ. 10 உயர்த்தி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
    ஆர்ப்பாட்டத்தை, அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்க அகில இந்தியத் தலைவர் எஸ். திருநாவுக்கரசு தொடக்கி வைத்தார்.
    மாவட்டச் செயலர்கள் சிஐடியு ஆர். அழகர்சாமி, விவசாயிகள் சங்கம் என். செல்லதுரை, விவாசாயத் தொழிலாளர் சங்கம் பி. ரமேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  மாவட்ட நிர்வாகிகள் பி. முத்துசாமி, ஏ. கணேசன், எஸ். அகஸ்டின், ஏ. அன்பழகன், ஏ.கே. ராஜேந்திரன், கோவிந்தன், எஸ். கண்ணம்மாள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai