சுடச்சுட

  

  பெரம்பலூரில் தொழிலாளர் அங்கீகாரம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, ஆட்சியர் அலுவலகம் எதிரே
  தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கத்தினர் வெள்ளிக்கிழமை தர்னாவில் ஈடுபட்டனர்.
  இந்த போராட்டத்துக்கு மாவட்டச் செயலர் கே. மணிமேகலை தலைமை வகித்தார். ஒன்றிய நிர்வாகிகள் பி. சக்தி, என். பானுமதி, கே. சுடர்மதி, ஏ. தமிழரசி ஆகியோர் முன்னிலை வகித்தனர். உதவியாளர் சங்க மாநிலச் செயலர் ஆர். ரத்தினமாலா, சி.ஐ.டி.யு. மாவட்டச் செயலர் ஆர். அழகர்சாமி, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் கே. ஆளவந்தார், சத்துணவு ஊழியர் சங்க மாவட்ட செயலர் எஸ். பெரியசாமி ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர்.ஆர்ப்பாட்டத்தில், திட்டப் பணியாளர் என்பதை மாற்றி அங்கன்வாடி ஊழியர்களை, தொழிலாளர்கள் என அங்கீகரித்து அரசு ஊழியராக்க வேண்டும். காலமுறை ஊதியம் நிர்ணயிக்க வேண்டும். குறைந்தபட்ச ஊதியமாக ரூ. 18 ஆயிரம் வழங்க வேண்டும். ஓய்வூதியமாக மாத ஊதியத்தில் 50 சதவீதம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.  இதில், பல்வேறு அமைப்புகளை சேர்ந்த ஆர். ராஜகுமாரன், பி. முத்துசாமி, பி. ரெங்கராஜ், ஏ. கணேசன், சி. சண்முகம், எஸ். அகஸ்டின், அங்கன்வாடி பணியாளர் சங்க நிர்வாகிகள் கே. மேனகா, ஜி. தனம், ஏ. சுமதி, ஆர். மகாராணி, ஜி. ஜெனின் ஜாய் உள்பட பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள 490 அங்கன்வாடி மையங்களை சேர்ந்த 690 அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு, தர்னா போராட்டத்தில் பங்கேற்றனர்.   

   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai