சுடச்சுட

  

  வேப்பந்தட்டை பகுதியில் எரிவாயு உருளைக்கு (கேஸ் சிலிண்டர்) கூடுதலாக கட்டணம் வசூலிப்பதை கண்டித்து, அப்பகுதி மக்கள் சிலிண்டர் ஏற்றி வந்த வாகனத்தை வெள்ளிக்கிழமை சிறைபிடித்தனர்.
  வேப்பந்தட்டைக்கு பெரம்பலூர் ஏஜென்ஸி மூலம் கொண்டு வரப்படும் சிலிண்டர் ஒன்றுக்கு ரசீது தொகை ரூ. 635, வாகன கட்டணமாக ரூ. 35 என மொத்தம் ரூ. 670 வசூலிக்கப்படுவதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை.
  இந்நிலையில், வேப்பந்தட்டை பகுதிக்கு விநியோகம் செய்வதற்காக சிலிண்டர்கள் ஏற்றி வந்த வாகனத்தை எரிவாயு நுகர்வோரும், இளைஞர்களும் சிறைபிடித்து கூடுதல் கட்டணம் வசூலிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
  ஆட்சியரிடம் புகார் தெரிவிக்கலாம் என கிராம முக்கியஸ்தர்கள் கூறியதை தொடர்ந்து, வாகனம் விடுவிக்கப்பட்டது.

   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai