Enable Javscript for better performance
பெரம்பலூரில் அதிமுக பொதுக்கூட்டம்- Dinamani

சுடச்சுட

    

    பெரம்பலூர் மேற்கு வானொலி திடலில், நகர அதிமுக சார்பில் எம்ஜிஆர் பிறந்த தின நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
    கட்சியின் நகரச் செயலர் ஆர். ராஜபூபதி தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்துக்கு, நகர பொறுப்பாளர்கள் எழிலரசி, சுப்ரமணியன், நீலா, ஜெகதீஸ்வரன், சேகர், சின்ன. ராஜேந்திரன், முன்னாள் நகரச் செயலர் ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
    அரசு தலைமை கொறாடாவும், அரியலூர் மாவட்ட செயலருமான தாமரை எஸ். ராஜேந்திரன், எம்ஜிஆரின் வரலாறு, சாதனை, கட்சி உருவாக்கம், வளர்ச்சி, அவரது சிறப்பு திட்டங்கள் குறித்து பேசினார்.
    தொடர்ந்து, மாவட்ட செயலரும், குன்னம் எம்எல்ஏவுமான ஆர்.டி. ராமச்சந்திரன், எம்எல்ஏ இரா. தமிழ்ச்செல்வன், மாவட்ட அணி செயலர்கள் எம்.என். ராஜாராம், கார்த்திகேயன், சந்திரகாசன், எம். வீரபாண்டியன் ஆகியோர் பேசினர்.
    கூட்டத்தில், வார்டு செயலர்கள் கனகராஜன், பாலசுப்ரமணியன், பெருமாள், பாபு, கலியமூர்த்தி, சக்திவேல், ரத்தினம், குமார், சிதம்பரம், நிர்வாகி சங்கு கா. சரவணன், புரட்சிதாசன், ராமகிருஷ்ணன் உள்பட பலர் கலந்துகொண்டனர். நகர அவைத் தலைவர் சி. ரமேஷ் வரவேற்றார். வழக்குரைஞர் கனகராஜ் நன்றி கூறினார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai