சுடச்சுட

    

    பெரம்பலூரில் புத்தகத் திருவிழா: முன்னேற்பாட்டுப் பணிகள் ஆய்வு: ஜன. 27 முதல் பிப். 5 வரை நடைபெறுகிறது

    By DIN  |   Published on : 21st January 2017 06:20 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பெரம்பலூர் நகராட்சி மைதானத்தில் ஜன. 27 முதல் பிப். 5 ஆம் தேதி வரை நடைபெறும் புத்தகத் திருவிழாவிற்கான முன்னேற்பாட்டு பணிகளை வெள்ளிக்கிழமை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார் ஆட்சியர் க. நந்தகுமார்.
    பெரம்பலூரில் கடந்த 5 ஆண்டுகளாக புத்தகத் திருவிழா நடைபெற்று வருகிறது. நிகழாண்டு, தேசிய புத்தக அறக்கட்டளை, தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கம் மற்றும் பெரம்பலூர் மக்கள் பண்பாட்டு மன்றம் சார்பில் ஜன. 27 முதல் பிப். 5 ஆம் தேதி வரை பெரம்பலூர் புறநகர் பேருந்து நிலையம் அருகில் உள்ள நகராட்சி மைதானத்தில் புத்தகத் திருவிழா நடைபெற உள்ளது.
    இதற்காக அரங்குகள் அமைக்கும் பணி தொடங்கப்பட உள்ளதை முன்னிட்டு, புத்தகத் திருவிழா நடைபெறுவதற்கான முன்னேற்பாட்டு பணிகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியர் க. நந்தகுமார், புத்தகக் கண்காட்சியை பார்வையிட வரும் பொதுமக்களுக்குத் தேவையான குடிநீர், கழிப்பிடம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மேற்கொள்ள வேண்டும்.
    மைதானத்தை சீர்படுத்தி குறித்த காலத்திற்குள் அரங்குகள் அமைக்கும் பணிகளை முடிக்க வேண்டும் என சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கினார்.
    ஆய்வின்போது, நகராட்சி ஆணையர் முரளி, வட்டாட்சியர் சீனிவாசன், புத்தகத் திருவிழா ஒருங்கிணைப்பாளர்கள் மணிவாசகம், செந்தில் ஆகியோர் உடனிருந்தனர்.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai