சுடச்சுட

    

    பெரம்பலூர் நகராட்சி அலுவலக வளாகத்தில் தனலட்சுமி சீனிவாசன் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை சார்பில், பெரம்பலூர் நகராட்சியில் பணிபுரியும் அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கான இலவச மருத்துவ முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.
    நகராட்சி ஆணையர் முரளி தொடக்கிவைத்தார்.
    முகாமில் தனலட்சுமி சீனிவாசன் மருத்துவமனை மற்றும் மருத்துவக் கல்லூரி இருதயச் சிகிச்சை நிபுணர் மருத்துவர் கணேஷ், பொது மருத்துவர் யோகேஷ்வரன் ஆகியோர் தலைமையிலான மருத்துவக் குழுவினர் சர்க்கரைப் பரிசோதனை, ரத்தக்கொதிப்பு மற்றும் இ.சி.ஜி உள்ளிட்ட பரிசோதனைகளை மேற்கொண்டனர். முகாமில் 300-க்கும் மேற்பட்ட நகராட்சி அலுவலர்கள், பணியாளர்கள் குடும்பத்தினருடன் பங்கேற்றனர். நகராட்சி துப்புரவு ஆய்வாளர்கள் கணேசன், பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai