சுடச்சுட

  

  பெரம்பலூர் புறநகர் பேருந்து நிலையம் எதிரே, ஜல்லிக்கட்டு நடத்த நிரந்தர சட்டம் இயற்றக் கோரியும், பீட்டா அமைப்பை தடைசெய்ய வலியுறுத்தியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சனிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
  ஆர்ப்பாட்டத்திற்கு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் எ. கலையரசி தலைமை வகித்தார். செயற்குழு உறுப்பினர்கள் ஆர். அழகர்சாமி, என். செல்லதுரை, பி. ரமேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
  பெரம்பலூர் லட்சுமி மருத்துவமனை மருத்துவர் சி. கருணாகரன் பேசியது: ஜல்லிக்கட்டை நடத்துவதற்கு அனுமதி கோரி தமிழகம் முழுவதும் நடைபெற்று வரும் ஆர்ப்பாட்டங்கள் தமிழர்களின் ஒற்றுமையை பறைசாற்றுகிறது. குறிப்பாக, மாணவ சமுதாயம் இந்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது வரவேற்கதக்கது. இதேபோல, தமிழகத்தின் பிரதான பிரச்னைகளுக்கு மாணவர்களின் பங்கு மிக முக்கியமானதாகும். எனவே, தமிழர்களின் பாரம்பரிய ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியை நடத்துவதற்கு நிரந்தர சட்டம் இயற்ற வேண்டும். பீட்டா அமைப்பை ரத்து செய்ய மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றார் அவர்.ஆர்ப்பாட்டத்தில், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் மாவட்டச் செயலர் எஸ்.பி.டி. ராஜாங்கம், ஆட்டோ சங்க மாநிலக்குழு உறுப்பினர் சி. சண்முகம், சங்க நிர்வாகிகள் எ. கணேசன், பி. கிருஷ்ணசாமி, எஸ். அகஸ்டின், பி. முத்துசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai