சுடச்சுட

    

    அரியலூர் மாவட்டம், விக்கிரமங்கலம் அருகே அரங்கோட்டை கிராமத்தை சேர்ந்தவர் முருகன் (31). அதே பகுதியை சேர்ந்தவர் சேகர் (39). இவர்கள் இருவருக்கும் இடையே கடந்த 16-ஆம் தேதி அன்று பானை உடைக்கும் போட்டியின்போது தகராறு ஏற்பட்டுள்ளது.
    இதில் ஆத்திரமடைந்த சேகர், தனது உறவினர் கொளஞ்சிநாதன் (32) ஆகிய இருவரும்  சேர்ந்து முருகனை தாக்கினர். இதையடுத்து முருகன், அவரது உறவினர் இளவரசன் ஆகியோர் சேகர், கொளஞ்சிநாதனை தாக்கினர். இதில் காயமடைந்ந்த காயமடைந்த 4 பேரும் அரியலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
    இதுகுறித்து விக்கிரமங்கலம் காவல் நிலையத்தில் இருதரப்பும் கொடுத்த புகாரின் பேரில் காவல் உதவி ஆய்வாளர் ராஜதுரை வழக்குப்பதிந்து முருகன், கொளஞ்சிநாதன், இளவரசன் ஆகியோரை சனிக்கிழமை இரவு கைது செய்தனர். மருத்துவமனையில் சேகர் சிகிச்சை பெற்று வருகிறார்.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai