சுடச்சுட

    

    சாலை பாதுகாப்பு வார விழா: மாணவர்களுக்கு கலைப் போட்டிகள்

    By DIN  |   Published on : 23rd January 2017 05:52 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பெரம்பலூர் மாவட்ட வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் சார்பில், சாலை பாதுகாப்பு வார விழாவையொட்டி பள்ளி மாணவ, மாணவிகளுக்கு கலைப் போட்டிகள் அண்மையில் நடைபெற்றது.
    தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துத் துறை சார்பில், ஜன. 17 முதல் 23 ஆம் தேதி வரை 28-வது சாலை பாதுகாப்பு வாரவிழா கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, வாகன ஓட்டுநர்களுக்கும், பொதுமக்களுக்கும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.  
    அதன்படி, பெரம்பலூர் மாவட்ட வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் சார்பில், பெரம்பலூர் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் மாவட்ட அளவில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கான கட்டுரை, ஓவியம், பேச்சு மற்றும் விழிப்புணர்வு வாசகம் எழுதும் போட்டிகள் அண்மையில் நடைபெற்றது.
    இந்த விழாவிற்கு வட்டாரப் போக்குவரத்து அலுவலர் த. அறிவழகன் தலைமை வகித்தார். போட்டிகளை அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சுந்தர்ராஜ் தொடக்கி வைத்தார். இதில், பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு பள்ளிகளில் இருந்து 300-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர்.  
    தொடர்ந்து, வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் அளித்தார் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் க. முனுசாமி.
    இதையடுத்து, பெரம்பலூர் அருகேயுள்ள வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது. வட்டார போக்குவரத்து அலுவலர் த. அறிவழகன் தலைமையில் நடைபெற்ற முகாமில் மருத்துவர் ஆனந்தமூர்த்தி தலைமையிலான மருத்துவக் குழுவினர், ஆட்டோ ஓட்டுநர்கள், இலகு ரக வாகன ஓட்டுநர்கள் என 200-க்கும் மேற்பட்டோருக்கு கண் பரிசோதனை மற்றும் சிகிச்சை அளித்தனர்.
    இந்நிகழ்ச்சிகளில், மோட்டார் வாகன ஆய்வாளர் கருப்பண்ணன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai