சுடச்சுட

    

    வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை:பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்

    By DIN  |   Published on : 23rd January 2017 05:52 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த பட்டதாரி இளைஞர்கள் வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என்றார் மாவட்ட ஆட்சியர் க. நந்தகுமார்.
    இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு:  
    எஸ்எஸ்எல்சி பயின்று தேர்ச்சியடையாதவர்கள் முதல் பட்டதாரிகள் வரை, வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து, தொடர்ந்து 5 ஆண்டுகளுக்கு மேல் புதுப்பித்து வேலைவாய்ப்பின்றி காத்திருக்கும் பதிவுதாரர்களுக்கு, வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ், பெரம்பலூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் விண்ணப்பங்கள் வழங்கப்படுகின்றன.  
    இத்திட்டத்தின் கீழ் பயன்பெற கல்வித் தகுதியை வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து 5 ஆண்டுகள் முடிவடைந்தவராக, அதாவது 31.12.2011-க்கு முன் பதிவு செய்தவராக இருக்க வேண்டும். வேலைவாய்ப்பு அலுவலக அடையாள அட்டையை தவறாமல் தொடர்ந்து புதுப்பித்திருக்க வேண்டும். 31.12.2016-ல் தாழ்த்தப்பட்ட, பழங்குடியினத்தவர்கள் 45 வயதைக் கடந்தவராகவும், இதர வகுப்பினர்கள் 40 வயதைக் கடந்தவராகவும் இருக்கக் கூடாது.  
    எந்த ஒரு கல்வி நிறுவனத்திலும் சேர்ந்து கல்வி பயிலும் மாணவ, மாணவியராக இருக்கக் கூடாது. தொலைதூரக் கல்வி பயிலுபவராக இருக்கலாம். சுயமாக தொழில் செய்பவராகவோ, சுயமாக சம்பாத்தியம் செய்பவராகவோ இருக்கக் கூடாது.  இத் தகுதியுடையோர் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை பிப். 28 ஆம் தேதி வரை அலுவலக வேலைநாள்களில் காலை 10 முதல் மதியம் 1 மணி வரை அளிக்கலாம். விண்ணப்பப் படிவம் பெறுவதற்கு அனைத்து கல்வி சான்றிதழ்கள், மாற்றுச் சான்றிதழ், புதுப்பிக்கப்பட்ட வேலைவாய்ப்பு அலுவலக அடையாள அட்டை ஆகியவற்றின் அசல் ஆவணங்களுடன் வரவேண்டும். ஏற்கெனவே பயனடைந்தவர்கள் விண்ணப்பிக்க தேவையில்லை.

     

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai