சுடச்சுட

    

    பெரம்பலூரில், வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பில் சாலை பாதுகாப்பு வார விழாவையொட்டி விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
    பெரம்பலூர் வெங்கடேசபுரத்தில் தொடங்கிய விழிப்புணர்வு பேரணிக்கு மாவட்ட வருவாய் அலுவலர் பி. வேலு தலைமை வகித்தார். வட்டார போக்குவரத்து அலுவலர் த. அறிவழகன் முன்னிலை வகித்தார். எம்எல்ஏக்கள் ஆர்.டி. ராமச்சந்திரன், இரா. தமிழ்ச்செல்வன் ஆகியோர் பேரணியை கொடியசைத்து தொடக்கி வைத்தனர்.
    நகரின் பிரதான வீதிகள் வழியாக சென்ற இந்த பேரணி, காவல் நிலையம் எதிரே நிறைவடைந்தது. பேரணியில் பங்கேற்றோர், சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு குறித்த வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி, பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். மேலும், சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்கள் விநியோகம் செய்யப்பட்டன. இதில், மோட்டார் வாகன ஆய்வாளர் கருப்பண்ணன், போக்குவரத்து பிரிவு ஆய்வாளர்கள் சிவக்குமார், மனோகரன், கார், ஆட்டோ ஓட்டுநர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

     

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai