Enable Javscript for better performance
பெரம்பலூர் மாவட்டத்தில் ஜன. 26-ல் கிராமசபைக் கூட்டம்- Dinamani

சுடச்சுட

    

    குடியரசு தினத்தையொட்டி, பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள 121 ஊராட்சிகளிலும் ஜன. 26 ஆம் தேதி ஊராட்சி தனி அலுவலர்கள் மூலம் கிராம சபைக்கூட்டம் நடைபெற உள்ளது என ஆட்சியர் க. நந்தகுமார் தெரிவித்துள்ளார்.  
    இதுகுறித்து அவர் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: குடியரசு தினத்தையொட்டி, பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள 121 ஊராட்சிகளிலும்  கிராமசபைக் கூட்டம் ஊராட்சி தனி அலுவலர்களால் நடத்தப்பட உள்ளது. இக்கூட்டத்தில், ஏற்கெனவே நடைபெற்ற கிராமசபைக் கூட்டத்தில் அளிக்கப்பட்ட மனுக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள், அனைத்து ஊராட்சி தனி அலுவலர்களின் செயல்பாடுகள் குறித்து தெரிவிக்க வேண்டும்.  
    மேலும், கிராம மக்களுக்கு என்னென்ன தேவை என்பதையும், அரசு நிர்வாகத்தில் உள்ள குறைபாடுகள் குறித்தும் மக்களிடையே கேட்டறிய வேண்டும். இந்தக் கூட்டத்தில் மக்களவை மற்றும் சட்டப்பேரவை உறுப்பினர்கள் வாக்காளர்களாக சார்ந்துள்ள கிராம ஊராட்சிகளில் பங்கேற்க வேண்டும். மேலும், அரசு நலத்திட்டங்கள் வழங்க வேண்டும்.  கிராமசபைக் கூட்டம் நடைபெறுவதை கண்காணிக்க, ஒவ்வொரு ஊராட்சிக்கும் சம்பந்தப்பட்ட வட்டார வளர்ச்சி அலுவலரால் பற்றாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். வட்டாரம் வாரியாக மண்டல அலுவலர்கள் கிராம சபைக் கூட்டம் நடைபெறுவதை மேற்பார்வையிட நியமிக்கப்பட்டுள்ளனர். குடியரசு தினத்தையொட்டி நடைபெறும் கிராமசபைக் கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகளும், பொதுமக்களும் அதிகளவில் பங்கேற்று, கிராம ஊராட்சிகளின் வெளிப்படையான நிர்வாகத்திற்கு வழிவகுத்து ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai