Enable Javscript for better performance
மோட்டார் சைக்கிள் மோதி முதியவர் சாவு- Dinamani

சுடச்சுட

    

    பாடாலூர் அருகே மோட்டார் சைக்கிள் மோதியதில் சாலையைக் கடக்க முயன்ற முதியவர் உயிரிழந்தார்.
    பாடாலூர் அருகேயுள்ள ஆலத்தூர் கேட்டை சேர்ந்தவர் அ. ராமசாமி (65). இவர், திங்கள்கிழமை காலை திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில், ஆலத்தூர் கேட் அருகே நடந்து சாலையைக் கடக்க முயன்றார். அப்போது, அந்த வழியாக சென்ற மோட்டார் சைக்கிள் மோதியதில் பலத்த காயமடைந்த ராமசாமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவலறிந்த பாடாலூர் போலீஸார் சம்பவ இடத்துக்கு சென்று, சடலத்தை மீட்டு பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இதுகுறித்த புகாரின்பேரில், பாடாலூர் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.  

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai