சுடச்சுட

  

  பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் பொறியியல் கல்லூரியில் திங்கள்கிழமை நடைபெற்ற வளாக நேர்காணலில் 162 மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
  பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் பொறியியல் கல்லூரி வளாகத்தில், சென்னையை சேர்ந்த சான்ஸ் பாரில் ஐ.டி சர்வீஸ் தனியார் நிறுவனம், மும்பை ரஸ்டோம்ஜி, சி.எம்.எஸ் ஐ.டி சர்வீஸஸ் ஆகிய முன்னணி நிறுவனங்கள் பங்கேற்றன.வளாக நேர்காணலை, சான்ஸ் பாரில் நிறுவனத்தின் நிர்வாகி ஆலன், ரெஸ்டோம்ஜி நிறுவன நிர்வாகி அமீத், சி.எம்.எஸ் நிறுவனத்தின் நிர்வாகி ராமலிங்கம் ஆகியோர் நடத்தினர். இதில், தனலட்சுமி சீனிவாசன் கல்வி நிறுவனங்களைச் சேர்ந்த 4 பொறியியல் கல்லூரிகளில் உள்ள கணினி அறிவியல், தகவல் தொழில்நுட்பம், மின்னணு மற்றும் தகவல் தொடர்பு, மின்னியல் மற்றும் மின்னணுவியல், முதுநிலை வணிக நிர்வாகம் மற்றும் கணினி பயன்பாடு ஆகிய துறைகளைச் சேர்ந்த 2,000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர்.  
  தொடர்ந்து, தேர்ந்தெடுக்கப்பட்ட 162 மாணவ, மாணவிகளுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டன. இதற்கான ஏற்பாடுகளை, மனிதவள மேம்பாட்டுத் துறை அலுவலர்கள் கிரீஷ், டி. முருகானந்தம், க. குருநாத், சந்திரசேகர் ஆகியோர் செய்திருந்தனர்.
  மனிதவள மேம்பாட்டுத் துறை இயக்குநர் மோகன் நன்றி கூறினார்.       

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai