சுடச்சுட

    

    தனித்தேர்வர்கள்  தேர்வுக்கூட அனுமதி சீட்டை பதிவிறக்கலாம்

    By DIN  |   Published on : 25th January 2017 07:52 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

     பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த தனித்தேர்வர்கள் புதன்கிழமை (ஜன. 25) முதல் தங்களது தேர்வுக்கூட அனுமதி சீட்டை இணையத்தில் பதிவிறக்கலாம் எனத் தெரிவித்துள்ளார் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் க. முனுசாமி.
    நடைபெற உள்ள மார்ச் 2017 மேல்நிலை பொதுத் தேர்வெழுத விண்ணப்பித்த தனித்தேர்வுகள், புதன்கிழமை முதல் ஜன. 29 வரை இணையத்தில் தேர்வுக்கூட நுழைவுச் சீட்டுகளை பதிவிறக்கலாம்.
    மொழிப் பாடங்களில் கேட்டல், பேசுதல் திறன் தேர்வு சிறப்பு மொழி (தமிழ்) பாடத்தில் கேட்டல், பேசுதல் திறன் தேர்வு செய்முறைத் தேர்விற்கான தேதி குறித்த விவரத்தை தேர்வெழுதும் மையத்தின் முதன்மைக் கண்காணிப்பாளரை அணுகி அறிந்து கொள்ள வேண்டும். மேலும், மார்ச் 2017 பொதுத் தேர்விற்கான கால அட்டவணையையும் மேற்கண்ட இணைய தளத்தில் அறிந்துகொள்ளலாம் என்றார்.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai