சுடச்சுட

  

  பெரம்பலூர் புறநகர்ப் பகுதியான துறைமங்கலம் பெரிய ஏரியில் செவ்வாய்க்கிழமை மீன்பிடித் திருவிழா நடைபெற்றது.
  திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள துறைமங்கலம் பெரிய ஏரியில்
  கெண்டை, கட்லா, கெளுத்தி, அயிரை உள்ளிட்ட பல்வேறு வகை மீன்களும் இருந்தன.
  இந்நிலையில் நிகழாண்டுக்கான மீன்பிடித் திருவிழா செவ்வாய்க்கிழமை நடைபெறுமென தண்டோரா போட்டு கிராம மக்களுக்குத் தெரிவிக்கப்பட்டது.
  விழாவையொட்டி செவ்வாய்க்கிழமை காலை ஏரியின் அருகேயுள்ள கோயிலில் அம்மனுக்குப் பொங்கலிட்டு, பூஜை செய்தனர். பின்னர் வலை, கூடைகளின் உதவியோடு கிராம மக்கள் ஏரியில் இறங்கி மீன் பிடித்தனர்.
  இருப்பினும் குறைந்தளவிலேயே மீன்கள் கிடைத்ததால் பெரும்பாலானோர் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். போதிய மழையின்றி தண்ணீர் குறைவாக இருந்ததே இதற்குக் காரணம் எனக் கூறப்படுகிறது.
  பெரம்பலூர், துறைமங்கலம், கல்பாடி உள்பட பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

   

   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai