சுடச்சுட

  

  தேசிய பெண் குழந்தைகள் தினம்: விழிப்புணர்வு சுவரொட்டிகள் வெளியீடு

  By DIN  |   Published on : 25th January 2017 07:51 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  தேசிய பெண் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு, அவர்களது பாதுகாப்பை உறுதிபடுத்தும் வகையிலான விழிப்புணர்வு சுவரொட்டியை திங்கள்கிழமை வெளியிட்டார் மாவட்ட ஆட்சியர் க. நந்தகுமார்.
  மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ், ஒருங்கிணைந்த குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்தின் மூலம் குழந்தைகளின் உரிமைகள் மற்றும் பாதுகாப்பு தொடர்பான பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மாவட்ட குழந்தை பாதுகாப்புத் திட்டத்தின் மூலம் மேற்கொள்ளப்படுகிறது.
  குறிப்பாக, சிறார் திருமணங்களைத் தடுத்தல், பாலியல் துன்புறுத்தல்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாத்தல், குழந்தை தொழிலாளர் முறையை ஒழித்தல், காணாமல் போன குழந்தைகளை மீட்டெடுத்தல் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் மாவட்ட நிர்வாகம் மூலம் மேற்கொள்ளப்படுகிறது.  
  அதன்படி, பெண் குழந்தைகளின் உரிமைகள் மற்றும் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில், பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமான சுவரொட்டிகளை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியரும், மாவட்ட குழந்தை பாதுகாப்புத் திட்டத் தலைவருமான க. நந்தகுமார் வெளியிட, மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலுவலர் ஆ. பன்னீர்செல்வம் பெற்றுக்கொண்டார்.
  இந்தச் சுவரொட்டிகள் பள்ளிகள், அரசு அலுவலகங்கள் மற்றும் குழந்தைகள், பொதுமக்கள் அதிகம் கூடுமிடங்களில் ஒட்டப்படவுள்ளன.

   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai