சுடச்சுட

    

    பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் வட்டம், செட்டிக்குளத்தில் உள்ள அருள்மிகு ஏகாம்பரேஸ்வரர், தண்டாயுதபாணி கோயிலில் பிப். 9 மாலை 3.30 மணிக்கு தேரோட்டம் நடைபெற உள்ளது.
    இக்கோயிலில் பிப். 1 காலை 9 மணிக்கு மேல் 10.30-க்குள் கொடியேற்றத்துடன் தைப்பூசத் திருவிழா தொடங்குகிறது. தொடர்ந்து, நாள்தோறும் காலை 10 மணிக்கு பல்லக்கில் சுவாமி புறப்பாடு, இரவு மூலவருக்கு அபிஷேக அலங்காரம், அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் சுவாமி புறப்பாடு நடைபெறுகிறது.
    7 ஆம் தேதி மூலவருக்கு அபிஷேக வழிபாடு, 7 மணிக்கு திருக்கல்யாணம், இரவு சுவாமி திருவீதி உலா, 8 ஆம் தேதி இரவு 9 மணிக்கு வெள்ளி மயில், குதிரை வாகனம் மற்றும் புஷ்பப் பல்லக்கில் திருவீதி உலா நடைபெறுகிறது.
    விழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருத்தேர் வடம் பிடித்தல் 9 ஆம் தேதி நடைபெறுகிறது. இதையொட்டி காலை 10.30 முதல் 12 மணிக்குள் திருத்தேருக்கு சுவாமி எழுந்தருளல், மாலை 3.30-க்கு திருத்தேர் வடம் பிடித்தல் நடைபெறுகிறது. 10 ஆம் தேதி கொடியிறக்குதல் நிகழ்ச்சி, 11 ஆம் தேதி மஞ்சள் நீர் விடையாற்றியுடன் விழா நிறைவடைகிறது. தேரோட்டத்தை முன்னிட்டு, பிப். 9 ஆம் தேதி பெரம்பலூர், துறையூர், அரியலூர் உள்ளிட்ட நகரங்களில் இருந்து சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. ஏற்பாடுகளை செயல் அலுவலர் ப. கெளதமன், தக்கார் பி. ஜெயதேவி மற்றும் திருக்கோயில் பணியாளர்கள், கிராம மக்கள் செய்கின்றனர்.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai