சுடச்சுட

  

  பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்தோர் ஆதார் எண் பெற தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி நிறுவனம் மூலமாக அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்கள் மற்றும் தமிழ்நாடு மின்னணு நிறுவனம் மூலம் மாவட்ட ஆட்சியரகத்தில் செயல்படும் நிரந்தரச் சேர்க்கை மையங்களைப் பயன்படுத்திக் கொள்ளலாம். இதற்கு கட்டணம் கிடையாது.
  ஆனால் சிலர் விரைவாக ஆதார் எண் பெற்றுத் தருவதாகக் கூறி பொதுமக்களை ஏமாற்றிப் பணம் வாங்குவதாகத் தெரியவந்துள்ளது. இவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க, இந்திய தனித்துவ அடையாள ஆணையம் வழிவகுத்துள்ளது.
  அதன்படி இந்த விதிமீறலுக்கு ரூ. 10,000 வரை அபராதம், ஓராண்டு சிறை தண்டனை விதிக்க முடியும்.  மாவட்ட ஆட்சியர் க. நந்தகுமார்  செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பில் இத்தகவலைத் தெரிவித்தார்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai