சுடச்சுட

    

    பெரம்பலூர் மாவட்டத்தில், பொது விநியோகத் திட்டத்தின் செயல்பாட்டில் வெளிப்படை முறையைக் கொண்டு வரும் வகையில் வியாழக்கிழமை (ஜன. 26) நடைபெறும் கிராமசபைக் கூட்டத்தில், நியாயவிலைக் கடைகளின் கணக்குகள் சமூகத் தணிக்கைக்கு உள்படுத்தப்பட உள்ளன என்றார் மாவட்ட ஆட்சியர் க. நந்தகுமார்.   பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள கிராமப்புறங்களில் செயல்படும் நியாயவிலைக் கடைகளின் கணக்குகள் வியாழக்கிழமை நடைபெறும் கிராமசபை கூட்டத்தில் சமூக தணிக்கைக்காக பொதுமக்கள் முன்பு வைக்கப்படும்.
    எனவே இக்கூட்டத்தில் பொதுமக்கள் தவறாமல் பங்கேற்க வேண்டும் என ஆட்சியர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai