சுடச்சுட

    

    தேசிய வாக்காளர் தினத்தையொட்டி, மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கான வாக்காளர் விழிப்புணர்வுப் போட்டிகள் செவ்வாய்க்கிழமை நடைபெற்றன.
    வாக்களிப்பது நமது ஜனநாயகக் கடமை. தேசிய வாக்காளர் தினத்தையொட்டி 18 வயது நிரம்பியோர் தங்களது பெயரை வாக்காளர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்பது உள்ளிட்ட கருத்துகள் குறித்து விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
    அதன்படி கல்லூரி மாணவ, மாணவிகளிடையே வாக்களிப்பதன் அவசியம், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பது குறித்து ஆட்சியரகக் கூட்டரங்கில் கட்டுரை, வினாடி- வினா, கோலப்போட்டிகள் நடைபெற்றன. போட்டிகளைத் தொடக்கிவைத்துப் பார்வையிட்டார் மாவட்ட வருவாய் அலுவலர் பா. வேலு.
    பேச்சு போட்டியில் 11 பேரும், கட்டுரைப் போட்டிகளில் 27 பேரும், ரங்கோலி கோலப் போட்டியில் 22 பேரும், வினாடி- வினா போட்டியில் 38 பேரும் கலந்து கொண்டனர்.
    இப்போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு புதன்கிழமை (ஜன. 25) நடைபெறும் தேசிய வாக்காளர் தின நிகழ்ச்சியில் பரிசுகள் வழங்கப்பட உள்ளன.வருவாய்க் கோட்டாட்சியர் இரா. பேபி, ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) எஸ். மாரிமுத்து, தேர்தல் பிரிவு வட்டாட்சியர் செல்வராஜ், ஒருங்கிணைப்பாளர் வ. சந்திரமெளலி, கல்லூரி மாணவ, மாணவிகள், அரசு அலுவலர்கள் பங்கேற்றனர்.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai