சுடச்சுட

  

  அனைத்து தரப்பினரும் வாக்களிக்க விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றார் வருவாய்க் கோட்டாட்சியர் இரா. பேபி.
  பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில், தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு வாக்காளர் தின விழா புதன்கிழமை கொண்டாடப்பட்டது.
  நிகழ்ச்சியில், வாக்காளர்களுக்கு புகைப்படத்துடன் கூடிய வண்ண வாக்காளர் அடையாள அட்டைகளும், சிறப்பாக பணிபுரிந்த வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கு சான்றிதழ்களும், தேசிய வாக்காளர் தினத்தையொட்டி நடத்தப்பட்ட ஓவியம், கட்டுரை, வினாடி - வினா, கோலம் ஆகிய போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கிய வருவாய்க் கோட்டாட்சியர் மேலும் பேசியது:
  வாக்களிப்பதன் முக்கியத்துவத்தை அனைத்து தரப்பு மக்களுக்கும் எடுத்துரைக்கும் பணியை, இளைய தலைமுறையினர் மேற்கொள்ள வேண்டும். 18 வயது பூர்த்தியடைந்த அனைவரும் தவறாமல் தங்களது ஜனநாயகக் கடமையை நிறைவேற்ற உறுதியேற்க வேண்டும்.
  உறவினர், நண்பர்கள் என அனைவரிடமும் தவறாமல் வாக்களிக்க விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றார் வருவாய்க் கோட்டாட்சியர் பேபி.
  நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) எஸ். மாரிமுத்து, மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் ப. கள்ளபிரான், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இன நல அலுவலர் மூர்த்தி, தேர்தல் பிரிவு வட்டாட்சியர் செல்வராஜ் உள்பட மாணவ,மாணவிகள், அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai