Enable Javscript for better performance
ஜல்லிக்கட்டுக்கு அனுமதி மறுப்பு: கோட்டாட்சியர் அலுவலகம் முற்றுகை- Dinamani

சுடச்சுட

    

    ஜல்லிக்கட்டுக்கு அனுமதி மறுப்பு: கோட்டாட்சியர் அலுவலகம் முற்றுகை

    By DIN  |   Published on : 26th January 2017 12:44 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், அரசலூர் கிராமத்தில் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு அனுமதி கோரி அந்த கிராமத்தை சேர்ந்த ஜல்லிக்கட்டு குழுவினர் மாவட்ட ஆட்சியர் க. நந்தகுமாரிடம் திங்கள்கிழமை மனு அளித்தனர். மனுவை பெற்றுக்கொண்ட ஆட்சியர், அரசு விதிமுறைகளுக்குள்பட்டு வியாழக்கிழமை (ஜன. 26) காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு அனுமதி அளித்தார்.
    இதையடுத்து, ஜல்லிக்கட்டு குழு மற்றும் கிராம மக்கள் சார்பில் அரசலூர் கிராமத்தில்  அனைத்து முன்னேற்பாட்டு பணிகளையும் மேற்கொண்டுள்ளனர்.
    இந்நிலையில், ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான அனுமதியை வருவாய்க் கோட்டாட்சியர் இரா. பேபி ரத்து செய்துவிட்டதாக கூறப்படுகிறது. இதையறிந்த அரசலூர் கிராம மக்கள், பெரம்பலூர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தை புதன்கிழமை இரவு முற்றுகையிட்டு, ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு அனுமதி அளிக்க வேண்டுமென கோரிக்கை விடுத்தனர்.  பின்னர், மாவட்ட ஆட்சியரிடம் கிராம மக்கள் மனு அளித்தனர். மனுவை பெற்றுக்கொண்ட ஆட்சியர், அரசு விதிமுறைகளுக்குள்பட்டு ஜல்லிக்கட்டை நடத்த வேண்டுமென உத்தரவிட்டார். அதைத்தொடர்ந்து, கிராம மக்கள் கலைந்துசென்றனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai