நாளை பெரம்பலூர் மாவட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டம்
By DIN | Published on : 26th January 2017 12:45 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் வெள்ளிக்கிழமை (ஜன. 27) நடைபெற உள்ளதாக தெரிவித்துள்ளார் மாவட்ட ஆட்சியர் க. நந்தகுமார். பெரம்பலூர் மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வெள்ளிக்கிழமை காலை 10 மணியளவில், மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது.இக்கூட்டத்தில், வேளாண்மை சம்பந்தமான நீர்ப்பாசனம், கடனுதவிகள், வேளாண் இடுபொருள்கள், வேளாண் இயந்திரங்கள் மற்றும் விவசாயிகள் மேம்பாட்டிற்கான நலத்திட்டங்கள் மற்றும் முறையீடுகள் குறித்து விவாதிக்கப்படும். இந்தக் கூட்டத்தில் பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகள், விவசாயிகள் சங்க பிரமுகர்கள் பங்கேற்று தங்களது குறைகளை தெரிவிக்கலாம் என, ஆட்சியர் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.