Enable Javscript for better performance
பெரம்பலூர் பகுதியில் ஜன. 28-ல் மின் தடை- Dinamani

சுடச்சுட

    

    பெரம்பலூர் துணை மின் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால், பெரம்பலூர் நகர் மற்றும் கிராமப்புற பகுதிகளில் ஜன. 28ஆம் தேதி மின் விநியோகம் இருக்காது.  
    இதுகுறித்து மின்வாரிய உதவி செயற்பொறியாளர் மோகன்தாஸ் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
    பெரம்பலூர் தானியங்கி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால், அங்கிருந்து மின் விநியோகம் பெறும் பெரம்பலூர் நகர்ப் பகுதிகளான புறநகர் மற்றும் பழைய பேருந்து நிலையம், சங்குப்பேட்டை, மதனகோபாலபுரம், துறைமங்கலம், மின் நகர், நான்குசாலை சந்திப்பு, பாலக்கரை, எளம்பலூர் சாலை, ஆத்தூர் சாலை, வடக்குமாதவி சாலை, துறையூர் சாலை, அரணாரை, ஆலம்பாடி சாலை, அண்ணா நகர், கிராமிய பகுதிகளான பீல்வாடி, அசூர், சிறுகுடல், சித்தளி,
    அருமடல், செங்குணம், கீழப்புலியூர், கே.புதூர், எஸ்.குடிகாடு, இந்திரா நகர், காவலர் குடியிருப்பு, எளம்பலூர், சமத்துவபுரம் உள்ளிட்ட பகுதிகளில் ஜன. 28ஆம் தேதி (சனிக்கிழமை) காலை 9.45 மணி முதல் பராமரிப்பு பணிகள் முடியும் வரை மின் விநியோகம் இருக்காது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai