சுடச்சுட

  

  பெரம்பலூரில், தேசிய வாக்காளர் தினத்தையொட்டி, புதன்கிழமை நடைபெற்ற விழிப்புணர்வு பேரணியில் கல்லூரி மாணவ, மாணவிகளை அரசு அலுவலர்கள் அலைக்கழித்தனர்.
  தேசிய வாக்காளர் தினத்தையொட்டி மக்களிடையே வாக்களிப்பதன் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு பேரணி நடத்துவதற்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
  பேரணியில் பங்கேற்பதற்காக, குரும்பலூர் பாரதிதாசன் பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரி, வேப்பந்தட்டை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, பெரம்பலூர் சாரதா மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, தனலட்சுமி சீனிவாசன் கல்வியியல் கல்லூரி, கிறிஸ்டியன் கல்வியியல் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு பேரணியில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
  அதன்படி, மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவு வாயில் பகுதியில் தொடங்கிய பேரணியில் சுமார் 50 மாணவ, மாணவிகள் மட்டுமே பங்கேற்றனர். இதையடுத்து, பேரணியை தொடக்கிவைத்த வருவாய்க் கோட்டாட்சியர் இரா. பேபி, அரசு அலுவலர்கள் மற்றும் பேரணி ஒருங்கிணைப்பாளரை அழைத்து, மாணவ, மாணவிகள் குறைந்ததற்கான காரணத்தை கேட்டறிந்தார். பின்னர், நுழைவு வாயிலில் இருந்து சுமார் 3 கிலோ மீட்டர் தொலைவு சென்ற பேரணி ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நிறைவடைந்தது.  
  சிறிது நேரத்தில், பேரணியில் பங்கேற்பதற்காக அழைக்கப்பட்டிருந்த மேற்கண்ட கல்லூரிகளை சேர்ந்த சுமார் 300-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்தனர். இதையறிந்த அலுவலர்களும், பேரணி ஒருங்கிணைப்பாளரும், மீண்டும் பேரணி நடத்துவதற்கு ஏற்பாடு செய்தனர்.
  அதைத்தொடர்ந்து, ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தொடங்கிய விழிப்புணர்வு பேரணி பாலக்கரை, வெங்கடேசபுரம் வழியாக சென்று சங்குப்பேட்டை பகுதியில் நிறைவடைந்தது.

   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai