சுடச்சுட

  

  பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள கல்வி நிறுவனங்களில் 68-வது குடியரசு தின விழா வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.
  பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் கல்வி நிறுவனங்கள் சார்பில் கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற விழாவில், கல்வி நிறுவனங்களின் தாளாளர் அ. சீனிவாசன் தேசியக் கொடியேற்றி வைத்து, மாணவ, மாணவிகளின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்.
  பின்னர், விளையாட்டுப் போட்டிகள், குடியரசு தினக் கலை நிகழ்ச்சிகளில் சிறப்பிடம் பெற்றோருக்குப் பரிசு வழங்கிப் பேசினார்.
  விழாவில், துணைத் தலைவர் அனந்தலட்சுமி கதிரவன், மருத்துவக் கல்லூரி டீன் ரெங்கநாதன், கண்காணிப்பாளர் நீலகண்டன், கல்லூரி முதல்வர்கள் இளங்கோ, இளங்கோவன், எஸ்.எச். அப்ரோஸ், சுகுமார், வேல்முருகன், வேலைவாய்ப்புத்துறை இயக்குநர் சேகர், பள்ளி முதல்வர்கள் கோவிந்தசாமி, மரியபுஷ்ப தீபா, துணை முதல்வர் ஜி. ரவி மற்றும் பேராசிரியர்கள் பங்கேற்றனர். தொடர்ந்து கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
  சாரதா மகளிர் கல்லூரியில் நடைபெற்ற விழாவில் கல்லூரித் தாளாளர் எம். சிவசுப்ரமணியன் தேசிய கொடியேற்றினார். செயலர் எம்.எஸ். விவேகானந்தன், கல்லூரி முதல்வர்கள் கண்ணகி, அ. சந்திரசூடன், ராமகிருஷ்ணா மெட்ரிக் பள்ளி முதல்வர் பி. கோமதி, துணை முதல்வர் கலைச்செல்வி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
  தந்தை ஹேன்ஸ் ரோவர் கல்வி நிறுவனங்கள் சார்பில் நடைபெற்ற விழாவுக்கு கல்லூரித் தாளாளர் கே. வரதராஜன் தலைமை வகித்து தேசியக் கொடியேற்றினார். துணைத் தலைவர் வி. ஜான் அசோக், அறக்கட்டளை உறுப்பினர் மகாலட்சுமி வரதராஜன், கல்லூரி முதல்வர்கள் வெ. அயோத்தி, பி. கணேஷ்பாபு, மக்கள் தொடர்பு அலுவலர்கள் டி. ராஜு, எஸ். சேகர், துறைத் தலைவர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
  கிறிஸ்டியன் கல்வி நிறுவனங்களின் சார்பில் நடைபெற்ற விழாவில் தாளாளர் எம். கிறிஸ்டோபர், கோல்டன் கேட்ஸ் மெட்ரிக் பள்ளியில் நடைபெற்ற விழாவில் பள்ளி தாளாளர் ஆர். ரவிச்சந்திரன், ஆருத்ரா மெட்ரிக் பள்ளியில் நடைபெற்ற விழாவில் நிர்வாகி ஆர். கணேசன், சிறுவாச்சூர் ஆல்மைட்டி பள்ளியில் நடைபெற்ற விழாவில் பள்ளி இயக்குநர் ராம்குமார் ஆகியோர் தேசியக் கொடியேற்றினர்.

   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai