சுடச்சுட

    

    பாரதிதாசன் பல்கலை. கல்லூரியில் பேரிடர் மேலாண்மைப் பயிற்சி

    By DIN  |   Published on : 27th January 2017 12:42 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பெரம்பலூர் அருகே குரும்பலூரில் உள்ள பாரதிதாசன் பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரியில், இளைஞர் செஞ்சிலுவைச் சங்கத்தின் சார்பில் பேரிடர் மேலாண்மைப் பயிற்சி புதன்கிழமை நடைபெற்றது. கல்லூரி முதல்வர் முனைவர் ந. ராசாராமன் தலைமை வகித்தார்.   சிறப்பு விருந்தினர்களாகப் பங்கேற்ற என். ஜெயராமன், வி. ராதாகிருஷ்ணன், டீ. பாஸ்கர், வி. விஜய் பிரசாத் ஆகியோர்  மாணவர்களுக்கு பயிற்சி மற்றும் செயல்முறை விளக்கம் அளித்தனர். பயிற்சியில், 300-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். இளைஞர் செஞ்சிலுவைச் சங்க திட்ட அலுவலர் முனைவர் தை. வளன் அரசு நன்றி கூறினார்.
    தொடர்ந்து கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற வாக்காளர் உறுதிமொழியேற்கும் நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வர் ந. ராசாராமன், நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர்கள்  உறுதிமொழி ஏற்றனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai