சுடச்சுட

    

    குடியரசு தினத்தையொட்டி, பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள உடும்பியம் கிராமத்தில் கிராம சபைக்கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.   
    இந்தக் கூட்டத்தில் பங்கேற்ற மாவட்ட ஆட்சியர் பேசியது: இதுபோன்ற கூட்டங்களில் பொதுமக்கள் தவறாமல் பங்கேற்க வேண்டும். மேலும், நிகழாண்டு பருவமழை பொய்த்ததால் பயிர்க் காப்பீடு செய்ய அறிவுறுத்தப்பட்டது. அதனடிப்படையில், பயிர் காப்பீடு செய்த அனைத்து விவசாயிகளும் தங்களது நிலத்தின் விவரங்கள், ஆதார் எண் மற்றும் வங்கி கணக்குப் புத்தக நகல் ஆகியவற்றை ஜன. 30-க்குள் சம்பந்தப்பட்ட விஏஓவிடம் சமர்ப்பிக்க வேண்டும்.
    மேலும், தங்களது வங்கி கணக்கு எண் மற்றும் ஆதார் எண்ணையும் இத்துடன் இணைத்து அளிக்க வேண்டும் என்றார் ஆட்சியர் நந்தகுமார். கூட்டத்தில் ஊராட்சிகள் உதவி இயக்குநர் கிருஷ்ணமூர்த்தி, வட்டார வளர்ச்சி அலுவலர் சிவகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai