சுடச்சுட

    

    அரியலூர், பெரம்பலூர் மாவட்டத்தில் விவசாயிகள் குறைகேட்புக் கூட்டம்

    By DIN  |   Published on : 28th January 2017 01:11 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற விவசாயிகள் குறை தீர்க் கூட்டத்தில் விவசாயிகளின் கோரிக்கைகள் உடனே நிறைவேற்றப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.  
    அரியலூர் ஆட்சியரக கூட்டரங்கில் ஆட்சியர் எ. சரவணவேல்ராஜ் தலைமையில் விவசாயிகள் குறைதீர்க் கூட்டம் நடைபெற்றது.
    கூட்டத்தில் தமிழக விவசாயிகள் சங்க மாவட்டச் செயலர் வி.விஸ்வநாதன் பேசியது: மானாவாரி பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ.5,465 வறட்சி நிவாரணமாக தமிழக அரசு அறிவித்தது போதுமானதாக இல்லை. எனவே மத்திய அரசின் வேளாண் காப்பீடு திட்டத்தின் கீழ், மானாவாரி பயிர்களான பருத்திக்கு ஏக்கர் ஒன்றுக்கு ரூ.21,000,மக்காச்சோளத்துக்கு ரூ.17,500,நெல்லுக்கு ரூ.25,000, மற்ற பயிர்களுக்கு வழங்க நிர்ணயித்த தொகையை வறட்சி நிவாரணமாக இயற்கை இடர்பாடு விதியின் கீழ் உயர்த்தி வழங்க மத்திய அரசை தமிழக அரசு வலியுறுத்த வேண்டும்.  
    அரியலூர் மாவட்ட விவசாயிகள் சங்கத் தலைவர் செங்கமுத்து: கூட்டுறவு பால் பண்ணை மூலம் நேரடியாக கறவையாளர்களுக்கு  பணத்தை வழங்க வேண்டும். மாவட்ட நுகர்வோர் நீதிமன்றம் அமைக்க வேண்டும்.
    தமிழக அம்பேத்கர் விவசாய இயக்க மாநிலத் தலைவர் அம்பேத்கர் வழியன்: திருமழபாடி,குருவாடி,சுள்ளங்குடி,அழகியமணவாளன்,ஏலாக்குறிச்சி,தூத்தூர் ஆகிய பகுதிகளில் கொள்ளிட ஆற்றின் குறுக்கே உடனே தடுப்பணைக் கட்ட வேண்டும்.திருமானூரை தனி வருவாய் வட்டமாக அறிவித்து அங்கு தீயணைப்பு நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
    கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் (பொ) ரெங்கராஜன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் யோகேஸ்வரி, கூட்டுறவு இணை பதிவாளர் தயாளன், சமூக பாதுகாப்பு திட்ட துணை ஆட்சியர் மங்கலம், கோட்டாட்சியர்கள் மோகனராஜன், டினாகுமாரி, வேளாண்மை இணை இயக்குநர் சதானந்தம் மற்றும் விவசாய சங்கப் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
    பெரம்பலூரில்:   பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்ட அரங்கில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற விவசாயிகள் குறைதீர்க் கூட்டத்துக்கு தலைமை வகித்து ஆட்சியர் ஆட்சியர் க. நந்தகுமார் பேசியது: பயிர்க் காப்பீடு செய்த அனைத்து விவசாயிகளும் தங்களது நிலம் குறித்த தகவல்கள்,ஆதார் எண் மற்றும் வங்கி கணக்குப் புத்தக நகல் ஆகியவற்றை ஜன. 30 ஆம் தேதிக்குள் கிராம நிர்வாக அலுவலரிடம் சமர்ப்பிக்க வேண்டும்.
    அரசின் நலத்திட்டங்களை விவசாயிகள் முறையாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். மேலும், அரசு அலுவலர்கள் விவசாயிகளின் கோரிக்கைகளை உரிய காலத்தில் நிறைவேற்றத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றார் ஆட்சியர் நந்தகுமார்.    கூட்டத்தில்,வேளாண்மை துணை இயக்குநர் சு. அய்யாசாமி, கூட்டுறவுத்துறை இணைப்பதிவாளர் சிவ. முத்துகுமாரசாமி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) ராஜகோபால், தோட்டக்கலை துணை இயக்குநர் ராஜாமணி மற்றும் விவசாயிகள் சங்க பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai