சுடச்சுட

    

    பண்பாட்டின் அடிச்சுவடுகளை வெளிக்கொணர்வதே கலை என்றார் பெரம்பலூர் அரசு மருத்துவக் கல்லூரி முதன்மையர் சீர்காழி ஜி. சிவசிதம்பரம்.
    பெரம்பலூர் தந்தை ஹேன்ஸ் ரோவர் தன்னாட்சிக் கல்லூரியின் கலை விழா, கல்லூரி வளாகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற அவர் மேலும் பேசியது:   குருவே நமது முதல் தாய் தந்தையர். பண்பாட்டின் அடிச்சுவடுகளை வெளிக்கொணர்வதே கலை. கலையோடு சேர்ந்த வாழ்வே மிக அவசியம். கலைப் புரட்சியே மாணவர்களுக்கு மிக முக்கியம். சமூகத்திற்கான புரட்சி மட்டுமல்ல, கலைக்கான புரட்சியும் மாணவர்களிடையே உள்ளது   என்றார் சிவசிதம்பரம். தொடர்ந்து, கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பிரபல திரைப்பட இயக்குநர் டி.எஸ். கண்ணன் பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கி பாராட்டினார். ரோவர் கல்வி நிறுவனங்களின் தாளாளர் கே. வரதராஜன் தலைமையில் நடைபெற்ற விழாவுக்கு, துணைத் தலைவர் வி. ஜான் அசோக், அறக்கட்டளை உறுப்பினர் மஹாலட்சுமி வரதராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில், கல்லூரி முதல்வர் முனைவர் வெ. அயோத்தி, துணை முதல்வர் அ. மகேந்திரன், பேராசிரியர் மருததுரை, உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai