பெரம்பலூரில் நாளை இலவச இருதய நோய் சிகிச்சை முகாம்
By DIN | Published on : 28th January 2017 01:11 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
பெரம்பலூர் அரிமா சங்கம் மற்றும் திருச்சி காவேரி ஹார்ட் சிட்டி சார்பில், இலவச இருதய நோய் சிகிச்சை முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது.
பெரம்பலூர் ஆர்.சி பாத்திமா தொடக்கப் பள்ளியில் ஞாயிற்றுக்கிழமை காலை 9 முதல் மாலை 2 மணி வரை, இலவச இருதய நோய் சிகிச்சை முகாம் ஞாயிற்றுக்கிழமை (ஜன.29) நடைபெறுகிறது.
திருச்சி காவேரி ஹார்ட் சிட்டி மருத்துவமனையை சேர்ந்த இருதய நோய் நிபுனர்கள் பங்கேற்று பரிசோதனை செய்து, சிகிச்சையும், ஆலோசனைகளும் அளிக்க உள்ளனர் என பெரம்பலூர் மாவட்ட அரிமா சங்கம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.