சுடச்சுட

    

    சத்துணவு அமைப்பாளர், சமையல் உதவியாளர் காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்

    By DIN  |   Published on : 29th January 2017 12:33 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பெரம்பலூர் மாவட்டத்துக்குள்பட்ட 4 ஊராட்சி ஒன்றியங்களில் செயல்பட்டு வரும் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் சத்துணவு மையங்களில் 21 சத்துணவு அமைப்பாளர் மற்றும் 19 சமையல் உதவியாளர் காலிப்பணியிடங்கள் நேரடி நியமனம் மூலம் நிரப்பப்பட உள்ளதால் ஜன. 30 முதல் பிப். 15 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.
    இதுகுறித்து ஆட்சியர் க. நந்தகுமார் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
    சத்துணவு அமைப்பாளர் பதவிக்கும், சத்துணவு மைய சமையல் உதவியாளர் பணிக்கும் விண்ணப்பிக்கும் ஒவ்வொரு பிரிவினருக்குமான கல்வித் தகுதிகள், வயது வரம்பு உள்ளிட்ட விதிமுறைகள் உள்ளிட்ட மற்ற விவரங்களை இணையத்திலும், மாவட்ட ஆட்சியரக சத்துணவு பிரிவிலும், அனைத்து ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களிலும் தெரிந்து கொள்ளலாம்.
    காலிப்பணியிடங்கள் மற்றும் இனசுழற்சி விவரங்கள் சம்பந்தப்பட்ட ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள், ஊராட்சி அலுவலகம் மற்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலக விளம்பர பலகையில் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது.
    விண்ணப்பதாரர்கள் விண்ணப்பங்களுடன் தேவையான சான்றுகளை இணைத்து ஜனவரி 30 முதல் பிப்ரவரி 15 ஆம் தேதி மாலை 5.45 மணிக்குள் நேரில் அல்லது அஞ்சல் மூலமாக ஆட்சியர் அலுவலகத்திற்கு அனுப்ப வேண்டும்.
    ஆட்சியர் அலுவலகத்தின் மூலம் பெறப்படும் விண்ணப்பங்கள் மட்டுமே நேர்முக தேர்விற்கு எடுத்துக் கொள்ளப்படும். ஏற்கெனவே விண்ணப்பித்தவர்கள், மீண்டும் ஆட்சியர் அலுவலகத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai