சுடச்சுட

  

  நமது பாரம்பரியத்தை காக்க, விவசாயிகள் சிறுதானியங்களை பயிரிட வேண்டும் என்றார் சிறுதானிய மகத்துவ மையத்தின் தலைவர் முனைவர் பரசுராமன்.
  பெரம்பலூர் மாவட்டம், குன்னம் வட்டம்,வேப்பூரில் பாமரர் ஆட்சியியல் கூடத்தில் அண்மையில்(ஜன.25)நடைபெற்ற சிறுதானியங்கள் அறுவடை நிகழ்ச்சிக்கு திருவண்ணாமலை அத்தியந்தல் சிறுதானிய மகத்துவ மைய மகத்துவ மையத்தின் தலைவர் முனைவர் பரசுராமன் தலைமை வகித்துப் பேசியது:
  ஏக்கர் நெல்லுக்கு ஆகும் செலவு, நீரில் 4 ஏக்கர் சிறுதானியங்களைப் பயிரிடலாம்.
  சிறுதானியங்களில் பூச்சித் தொல்லை கிடையாது. நமது பாரம்பரியத்தைக் காக்க, விவசாயிகள் சிறுதானியங்களைப் பயிரிட வேண்டும் என்றார் பரசுராமன். தொடர்ந்து, முனைவர் சிவகாமி பேசியது: வேப்பூர் வட்டார விவசாயிகள் 70 நாள்களில் விளையக்கூடிய பனிவரகு பயிரிடலாம். சிறுதானியங்களில் உள்ள கால்சியம், மெக்னீசியம், இரும்புச் சத்துக்கள் உடலுக்கு ஊட்டத்தை அளிக்கக் கூடியவை என்றார் அவர். உதவிப் பேராசிரியர் முனைவர் ராஜேஷ் பேசியது: பருவநிலை மாறிவரும் சூழலில், மிகக்குறைவான தண்ணீரே தேவைப்படும் சிறுதானியங்கள் காலத்தின் தேவை என்றார் அவர்.
  முன்னதாக, தெலங்கானா மாநிலத்தின் மேடக் மாவட்டத்தில், 75 கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள், சிறுதானியங்கள் பயிரிட்டு உணவகம் செயல்படுத்துவது குறித்த குறும்படம் காண்பிக்கப்பட்டது.

   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai