சுடச்சுட

  

  பாரதிய ஜனதா கட்சியின் பெரம்பலூர் மாவட்ட இளைஞரணி நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
  அக்கட்சியின் பெரம்பலூர் மாவட்டத் தலைவர் சாமி. இளங்கோவன் பரிந்துரைப்படி, இளைஞரணி மாவட்ட தலைவர் வேலுசாமி, புதிய நிர்வாகிகளை நியமனம் செய்து அறிவித்துள்ளார்.
  அதன்படி, பெரம்பலூர் மாவட்ட பொதுச் செயலர்களாக ப. முத்தமிழ்ச்செல்வன், செ. செல்வக்குமார், செ. தியாகராஜன், மாவட்ட பொருளாளராக பெ. பாக்கியராஜ், மாவட்ட துணைத் தலைவர்களாக த. வினோத்குமார், செ. வடிவுக்கரசி, பா. செல்வக்குமார், ம. ரகுபதி, தி. ஆறுமுகம் ஆகியோரும், மாவட்ட செயலர்களாக த. செல்வக்குமார், வே. செந்தாமரை, கி. மனோஜ்குமார், இ. பாலகிருஷ்ணன், ம. சதீஷ் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும், மாவட்ட செயற்குழு உறுப்பினர்களாக சி. கோவிந்தசாமி, பொ. ராஜேந்திரன், ரா. சுதாகர், த. கவுதமன், ரா. இளையராஜா, பெ. பிரபாகரன், ரா. சுந்தர், வீ. மாரிமுத்து, மு. பழனிசாமி, பா. இளையராஜா, ந. ராஜா ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai