சுடச்சுட

    

    9 மாதம் முதல் 15 வயது வரையுள்ள குழந்தைகளுக்கு பிப். 6 ஆம் தேதி முதல் 28 வரை தட்டம்மை, ரூபெல்லா தடுப்பூசி போடப்படும் என்றார் ஆட்சியர் க. நந்தகுமார்.
    தமிழக அரசின் தட்டம்மை, ரூபெல்லா தடுப்பூசி முகாம் தொடர்பாக அனைத்துத் துறை அலுவலர்களுடனான கூட்டம், பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் அண்மையில் நடைபெற்றது.
    கூட்டத்துக்கு ஆட்சியர் தலைமை வகித்துப் பேசியது:
    பெரம்பலூர் மாவட்டத்தில் 9 மாதம் முதல் 5 வயது வரையுள்ள 36,282 குழந்தைகளுக்கு அங்கன்வாடி மையங்களிலும், 6 வயது முதல் 15 வயது வரையுள்ள 96,326 குழந்தைகளுக்கு அரசு மற்றும் தனியார் பள்ளிகளிலும் தட்டம்மை ரூபெல்லா தடுப்பூசி போடப்படும். மேலும், விவரங்களுக்கு, 04328- 224553. கூட்டத்தில், சுகாதாரத்துறை இணை இயக்குநர் செல்வராஜன், சுகாதார பணிகள் துணை இயக்குநர் சம்பத், மண்டல நோய் கண்காணிப்பு அலுவலர் ஜெயசீலன், மாவட்ட கல்வி அலுவலர் சுகுமார், மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் இரா. எலிசபெத் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai