சுடச்சுட

    

    பெரம்பலூர் மாவட்டத்தில் வறட்சி கணக்கெடுப்பு பணிகள் 70% நிறைவு

    By DIN  |   Published on : 29th January 2017 12:34 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பெரம்பலூர் மாவட்டத்தில் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளை கணக்கெடுக்கும் பணிகள் 70 சதவீதம் நிறைவடைந்துள்ளது.
    இதுகுறித்து, வேளாண்மை துறை சார்பில் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
    பெரம்பலூர் மாவட்டத்தின் ஆண்டின் சராசரி மழையளவான 861 மி.மீட்டரில், ஜனவரி மாதம் வரை 510 மி.மீ மழை பெய்துள்ளது. நிகழாண்டு 350 மி.மீ மழை குறைவாக கிடைத்துள்ளது. ஜனவரியில் பெய்த மழையளவு 16 மி.மீட்டராகும். பயிர் சாகுபடி பரப்பை பொறுத்தவரை இதுவரை 3,248 ஹெக்டேர் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
    நெல் விதைகள் 209 மெட்ரிக் டன் கொள்முதல் செய்யப்பட்டு, 106 மெட்ரிக் டன் விநியோகம் செய்யப்பட்டுள்ளது. சிறுதானியங்களை பொறுத்தவரை 0.425 மெட்ரிக் டன் கொள்முதல் செய்யப்பட்டு முழுவதும் விநியோகம் செய்யப்பட்டுள்ளது. பயறு வகைகள் 19,351 மெட்ரிக் டன் கொள்முதல் செய்யப்பட்டு 6,224 மெட்ரிக் டன் விநியோகம் செய்யப்பட்டுள்ளது. பயிர் காப்பீட்டு திட்டத்தில், 152 வருவாய் கிராமங்களுக்கும் மக்காச்சோளம் மற்றும் பருத்தி ஆகிய பயிர்களுக்கு காப்பீடு செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. வறட்சியால் பாதிக்கப்பட்ட பகுதிகளை வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத் துறை மற்றும் வருவாய்த் துறை ஆகிய துறைகளின் மூலமாக கணக்கெடுக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. அதன்படி, இதுவரை 70 சதவீத பணிகள் நிறைவடைந்துள்ளது. மீதமுள்ள 30 சதவீத பணிகளும் ஜனவரி மாத இறுதிக்குள் முடிக்கப்படும் என, அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai