சுடச்சுட

    

    "வரலாற்றையும், பாரம்பரியத்தையும் தெரிந்து கொள்வது அவசியம்'

    By DIN  |   Published on : 29th January 2017 12:34 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    வரலாற்றையும், நமது பாரம்பரியத்தையும் மாணவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்றார் முன்னாள் எம்.பி. அ. கணேசமூர்த்தி.
    பெரம்பலூர் தந்தை ஹேன்ஸ் ரோவர் தன்னாட்சிக் கல்லூரியின் ஆண்டு விழா, கல்வி நிறுவனங்களின் தாளாளர் கே. வரதராஜன் தலைமையில் சனிக்கிழமை நடைபெற்றது.
    விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற கணேசமூர்த்தி மேலும் பேசியது:
    சுமார் 5 ஆயிரம் ஆண்டுகள் பழமையான நம் தமிழ்மொழியின் வரலாற்றையும், தொன்மையையும் மாணவர்கள் தெரிந்து கொண்டு செயல்பட வேண்டும். மேலும், வரலாற்றையும், நம் பாரம்பரியத்தையும் தெரிந்துகொள்வது அவசியம்.
    அதோடு மட்டுமன்றி, தங்களுக்கான தன்னிலை விளக்கத்தையும் மாணவர்கள் வரையறுத்துக் கொள்ள வேண்டும் என்றார்.
    2016- 17 ஆம் கல்வி ஆண்டிற்கான ஆண்டறிக்கையை வாசித்தார் கல்லூரி முதல்வர் முனைவர் வெ. அயோத்தி, ரோவர் கல்லூரியின் முன்னாள் வணிகவியல் துறை பேராசிரியர் மதிவாணன், துறை தொடர்பான கருத்தரங்கங்கள் நடத்துவதற்கு ரூ. 50 ஆயிரம் நன்கொடையாக வழங்கினார்.
    2016 - 17 ஆம் கல்வியாண்டில் அதிக மதிப்பெண்களை பெற்று சாதனை படைத்த மாணவர்களுக்கு நினைவுப் பரிசும், புத்தகங்களும், பாரதிதாசன் பல்கலைக்கழக அளவில் பல்வேறு பரிசுகளைப் பெற்ற கலைக்குழுவை சேர்ந்த மாணவர்களும் கெளரவிக்கப்பட்டனர். 100 சதவீத தேர்ச்சி பெற முயற்சித்த பேராசிரியர்களுக்கும் நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டன.
    தொடர்ந்து, கல்லூரயின் கலைக்குழு மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. விழாவில், அறக்கட்டளை உறுப்பினர்கள் மஹாலட்சுமி வரதராஜன், ஜான் குணாளன், துணைத் தலைவர் வி. ஜான் அசோக், கல்விக்குழும இயக்குநர் பாலமுருகன், அரியலூர் அரசு கலைக் கல்லூரி தமிழ்த்துறைப் பேராசிரியர் முனைவர் க. தமிழ்மாறன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
    கல்லூரி துணை முதல்வர் அ. மகேந்திரன் நன்றி கூறினார்.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai