சுடச்சுட

  

  வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயி மற்றும் அவர்களது பயிர்கள் குறித்து இணையத்தில் பதிவேற்றம் செய்வது தொடர்பாக கிராம நிர்வாக அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்பு பெரம்பலூர் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அண்மையில் நடைபெற்றது.
  வடகிழக்கு பருவமழை பெய்யாததால் ஏற்பட்டுள்ள பயிர் சேதங்களை ஈடுசெய்யும் வகையில், அனைத்து பயிர்களுக்கும் பயிர் காப்பீடு செய்ய மாவட்ட நிர்வாகத்தால் விவசாயிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது. அதைத்தொடர்ந்து, பெரும்பாலான விவசாயிகள் தங்களது விளைநிலத்தில் உள்ள பயிர்களுக்கு காப்பீடு செய்துள்ளனர்.
  காப்பீடு நிறுவனங்களுக்குத் தேவையான அனைத்து தகவல்களும் கிராம நிர்வாக அலுவலர்களால் இணையதளம் மூலமாக பதிவேற்றம் செய்யப்படுகிறது.
  அதன்படி, விவசாயி மற்றும் அவர்களது பயிர்கள் குறித்த விவரங்களை இணையத்தில் பதிவேற்றம் செய்வது தொடர்பான பயிற்சி வகுப்பு நடைபெற்றது.
  பயிற்சி வகுப்பை தொடக்கிவைத்து ஆட்சியர் க. நந்தகுமார் பேசியது: பெரம்பலூர் மாவட்டத்தில் பயிர் காப்பீடு செய்த அனைத்து விவசாயிகளும் தங்களது நிலம் குறித்த தகவல்களையும், ஆதார் எண் மற்றும் வங்கி கணக்குப் புத்தக நகல் ஆகியவற்றை ஜன. 30 ஆம் தேதிக்குள் சம்பந்தப்பட்ட கிராம நிர்வாக அலுவலரிடம் சமர்ப்பிக்க வேண்டும். மேலும், தங்களது வங்கி கணக்கு எண் மற்றும் ஆதார் எண்ணையும் இத்துடன் இணைத்து அளிக்க வேண்டும் என்றார் அவர்.
  இதில், ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) ராஜகோபால், வட்டாட்சியர்கள் த. பாலகிருஷ்ணன் (பெரம்பலூர்), தமிழரசன் (குன்னம்), சீனிவாசன் (ஆலத்தூர்) மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai