சுடச்சுட

    

    ஆள்குறைப்பு, பணி நீக்க நடவடிக்கையை கைவிடக் கோரி போராட்டம் நடத்த நீர்வடிப்பகுதி மேம்பாட்டு அணி உறுப்பினர்கள் சங்கம் முடிவு

    By DIN  |   Published on : 30th January 2017 08:25 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தமிழ்நாடு நீர்வடிப்பகுதி மேம்பாட்டுத் திட்டத்தில் ஆள் குறைப்பு, பணிநீக்க நடவடிக்கையை கைவிடக் கோரி உண்ணாவிரதம் மற்றும் தர்னா போராட்டத்தில் ஈடுபடுவதென, நீர்வடிப்பகுதி மேம்பாட்டு அணி உறுப்பினர்கள் சங்க திருச்சி மண்டல கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.
    பெரம்பலூர் பழைய பேருந்து நிலையம் அருகே, திருச்சி மண்டல அளவிலான தமிழ்நாடு நீர்வடிப்பகுதி மேம்பாட்டு அணி உறுப்பினர்கள் சங்க கூட்டம் நிர்வாகி சேதுமாதவன் தலைமையில் சனிக்கிழமை நடைபெற்றது.
    மாநிலத் தலைவர் திருகண்ணன் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்.  கூட்டத்தில், தமிழ்நாடு நீர்வடிப்பகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் பணிபுரிபவர்களை ஆள் குறைப்பு மற்றும் பணிநீக்கம் செய்யும் நடவடிக்கைகளை தமிழக அரசு கைவிட வேண்டும்.
    ஆள்குறைப்பு மற்றும் பணிநீக்க நடவடிக்கையை கைவிட வலியுறுத்தி மண்டல, மாவட்ட அளவில் உண்ணாவிரதம், தர்னா போராட்டத்தில் ஈடுபடுவது.  மேலும், மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, மார்ச் 31 ஆம் தேதிக்கு முன்னதாக மாநில அளவில் சென்னையில் நடத்த உத்தேசித்துள்ள உண்ணாவிரத போராட்டத்தில் பெரம்பலூர், அரியலூர், திருச்சி,
    புதுக்கோட்டை, திண்டுக்கல் ஆகிய திருச்சி மண்டலத்தை சேர்ந்த உறுப்பினர்கள் பங்கேற்பது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.இதில், அமைப்பு செயலாளர் செந்தில்குமார், ஒருங்கிணைப்பாளர் சந்திரசேகரன், பொதுச் செயலர் விக்ரம்சிங், பிரசார செயலர் இவான்ஸ்டின், அரசு ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் கி. ஆளவந்தான், சங்க பொறுப்பாளர் கணேஷ்குமார் உள்பட பலர் கலந்துகொண்டனர். நிர்வாகி ராமு நன்றி கூறினார்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai