சுடச்சுட

    
    agri

     

    பெரம்பலூர் மாவட்டம், குன்னம் வட்டத்தில், இயற்கை முறையில் சாகுபடி செய்யப்பட்டுள்ள பயிர்களை வெளிநாட்டினர் ஞாயிற்றுக்கிழமை பார்வையிட்டனர்.
    குன்னம் வட்டம், ஒகளூர் கிராமத்தில் பொறியாளர் கோகுல், தனக்கு சொந்தமான 4 ஏக்கரில் இயற்கைமுறை பாரம்பரிய நெல் வகைகளான மாப்பிள்ளை சம்பா, ஆத்தூர் கிச்சலி சம்பா, கருடன் சம்பா, சீரக சம்பா, வெள்ளை பொன்னி மற்றும் காய்கறிகள், கீரை வகைகள் சாகுபடி செய்துள்ளார். இந்தப் பயிர்களை, இயற்கை ஆர்வலர்களான பிரான்ஸ் நாட்டை சேர்ந்த பிரான்சிஸ்கோ, ஜப்பானை சேர்ந்த மொமோரோ, மணிப்பூரைச் சேர்ந்த ஃபஞ்சுளா, நேபாளத்தை சேர்ந்த துர்க்கா ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டனர். தொடர்ந்து, கழனிவாசல் கிராமத்தில் விவசாயி பன்னீர்செல்வம், ஒருங்கிணைந்த பண்ணையம் முறையில் வளர்த்து வரும் ஆடு, மாடு, கோழி, மீன், தேனீ மற்றும் சாகுபடி செய்துள்ள பழங்கள், நெல் வகைகளையும், ஒகளூர் கிராமத்தில் விவசாயி சுரேஷ் வயலுக்கு சென்ற அவர்கள், அங்கு இயற்கை முறையில் பராமரிக்கப்பட்டு வரும் நாட்டுக்கோழி, காளான் பண்ணை, கோனேரிப்பாளையம் கிராமத்தில் விவசாயி குமார் சாகுபடி செய்துள்ள முள்ளங்கி, அவரை உள்ளிட்ட பல்வேறு வகையான காய்கறிகளை பார்வையிட்டனர். மேலும்,  
    தமிழ் பண்பாடு, கலாசாரம், இயற்கை வேளாண்மையின் மகத்துவம் குறித்து விவசாயிகளிடம் கேட்டறிந்தனர்.
    மேலும், இயற்கை வேளாண்மையை மேம்படுத்தும் வகையில் ஆரோவில் சாகுபடி செய்யவும், தங்களது நாட்டிலும் இயற்கையை சார்ந்து வாழ்வதற்கு தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என தெரிவித்தனர். தொடர்ந்து, பெரம்பலூர் நகராட்சி மைதானத்தில் நடைபெற்று வரும் புத்தகக் கண்காட்சியை பார்வையிட்டு, அங்கு நடைபெற்ற கலை நிகழ்ச்சிகளை கண்டு ரசித்தனர். இதற்கான ஏற்பாடுகளை இயற்கை வேளாண் வல்லுநர் ஏகாம்பரம் செய்திருந்தார்.   

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai